எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்!!
டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இவரது SpaceX நிறுவனம் நாசா, இஸ்ரோ போன்று விண்வெளிக்கு ராக்கெட், செயற்கைகோள்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தின் லோகோவை வடிவமைத்த டெஸ்லா பொறியாளர் அலெக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காலை 6.30 மணிக்கு நியூயார்க்கிலிருந்து பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர்.
அந்த கப்பல் கடலில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பயணிகள் அங்குள்ள ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, ராக்கெட் பறக்க தொடங்குகிறது. 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் பயணித்து 39 நிமிடத்தில் ஷாங்காய் நகரை அடைகிறது.
அதன்பின் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்ற தகவல் அந்த வீடியோவில் உள்ளது. இதில் டோக்கியோவிலிருந்து டெல்லிக்கு 30 நிமிடங்கள், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை