கொழும்பில் பலர் கைது!!

 


கொழும்பு ஜம்பட்டா வீதி, போதைப்பொருளுடன் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த நடவடிக்கையின் போது, ​​சந்தேகநபர்களிடம் இருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.