தமிழ் தேசியம் தோற்றுவிட்டதா!!

 


தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக திசைமாறிவிட்டர்கள் 

ஆகவே தமிழ்தேசியம் நவீன மயப்படுத்தப்படவேண்டும் என ஒரு சமூகப்போராளி எழுதியிருந்தார்.

 


தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நவீனம் புகுத்தப்படவேண்டும் அது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படவில்லை அதனால் அதனை மறுசீரமைக்கவேண்டும் என்பது அந்த போராளியின் சிந்தனை 


கொள்கைகள் கடத்தப்படுவது அது தலைமுறை மாற்றத்தை ஏற்காதது யாருடைய குற்றம் நீங்கள் நீங்கள் கொண்டாடித்தீர்க்கும் மாற்றத்தின் நாயகர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றியா இப்பெரும் வெற்றியை பெற்றார்கள் ? 


நாம் எடுத்தற்கெல்லாம் காரணம் சொல்லி இன்னொருவரை பலிக்கடாவக்கி பழக்கபடுத்தப்படவர்கள் 


ஆனால் எல்லாவிடத்திலும் அதே நிலைப்பாட்டில் நம்மை வைத்திருப்பது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா ? 


இனி விடயதானத்திற்கு வரலாம் 


தமிழ்தேசிய நிலைப்பாட்டில் மாற்றம் என்பது  வார்த்தை வர்ணிப்புகளில் சாத்தியமாகலாம் ஆனால் காலம் காலமாக இந்த தேசத்து இளைஞர்களை தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து இன்று நாம் இருப்பது போல் அல்லாமல் மண் விடுதலையையும் மக்களின் நிம்மதியான வாழ்வை மட்டுமே கருத்துல்கொண்டு அந்த தேசிய நிலைப்பாட்டிற்காக தங்களை தியாகித்த உத்தமர்களை நினைவுகளில் நிறுத்திக்கொண்டிருக்கும் இப்புனிதமாத மாதத்தில்  

இந்த கொள்கைத்திரிபு பற்றி பேசுவது அபத்தம் 


என்றாலும் பேசியே ஆகவேண்டிய நிலை நமக்கு. 


தேர்தல் அரசியல் முடிவை மட்டும் வைத்து தமிழ்தேசியம் தோற்றுவிட்டது என்று கூவுகிறோமே 

இந்த தேர்தலில் தோற்றுப போனவர்கள் அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தேசியவாதிகளா ? 


ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேசியத்தின் பெயரால் நம்மை மடையர்களாக்கி நம் தலைகளில் மிளகாய் அரைத்துவிட்டு நாடாளுமன்ற சிறப்புரிமைகளை அனுப்பவித்துக்கொண்டு கார்பேமிற் தொடங்கி பார் பேமிற் வரை பெற்றுக கொண்ட இவர்கள் தோற்றது தமிழ் தேசியம் தோற்றது என்றாகிவிடுமா 


எத்தனையோ சந்தர்ப்பம் வாய்த்தும் அத்தனையையும் தவறவிட்டு தங்களுக்கானதை மட்டும் கேட்டுப்பெற்றுக்கொண்ட இவர்கள் தோற்றது தமிழ்த்தேசியத்தின் தோல்வியா ? 


இந்த யுத்தம் எனது நிலத்தை பறித்தது , எனது வீட்டை தரைமட்டமாக்கியது , எனது இளம்பராயத்தை அகதியாக்கியது , எனது அண்ணாவை , அக்காவை , சித்தப்பாவை , மாமாவை என் உறவுகளை எல்லாம் தின்று ஏப்பம் விட்டது 

 


நான் பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக அகதி வாழ்க்கை 

ஊரூராய் கால்நடையாய் நடந்தோம் 

அகதிக்கூடாரங்களில் மாடுகளைப்போல படுத்திருந்தோம் 


இன்றும் வலிகளோடு வாழ்வாதாரத்தை இழந்தும் இருக்கிறோம் ஆனால் எங்கள் பிரதிநிகள் எப்படி வாழ்கிறார்கள் ? 


இவர்கள் தோற்றதுதான் தமிழ்தேசியத்தின் தோல்வியா ? 


இந்த நிலத்தில் அந்த மவீரனின் பெயர் மறக்கப்படும் வரை தமிழ்த்தேசியம் தோற்றுவிடாது 


இனி இது எப்படியான நிலைப்பாடு என பார்ப்போம் . 


தமிழ்தேசியம் காலங்காலமாக தலைமுறைகளாக கடத்தப்பட்டது அதன் விளைவுதான் உலகின் உன்னதமான போரியல் அமைப்பை நாம் கொண்டிருந்தோம் 


இங்கு தலைமுறைகளுக்கு கடத்தப்படவில்லை என்றால் கடத்த முற்படுங்கள் , அதுதான் ஒரே வழி 

தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை மாற்றுவது அல்ல 


போய் சேரவில்லை என்பதற்காக நாம் போக வேண்டிய இடத்தை மாற்றுவதா 

மாற்றுவழிகளை கையாளுங்கள் 


மக்கள். இயக்கங்களை தோற்றுவியுங்கள் 


கொள்கைக்காக வேலை செய்யுங்கள் 


கொள்கைகள் எங்கும் மாறுவதில்லை 

தமிழ்தேசியம் ஓர் கோட்பாடு 

அது தந்தை செல்வநாயகத்திடமும் தலைவர் பிரபாகரனிடமும் நந்திக்கடலிலும் மாறுபடவில்லை மாற்றாக மாற்றுப்பாதைகளினூடாக கொண்டு சேர்க்கவேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது .

தலைமுறைகளுக்கு கடத்துகின்ற பாதையில் தந்தை செல்வா தோற்றிருந்தால் தலைவர் பிரபாகரன் என்ற மனிதர் நமக்கு கிடைத்திருக்க மாட்டார் தலைவர் தோற்றிருந்தால் நாம் இன்று பேசிக்கொண்டிருக்க மாட்டோம் 


தீர்வுகளை சிந்தியுங்கள் 


அவர்கள் கொள்கைகளை மாற்றவில்லை பாதைகளை மாற்றினார்கள் 


தோற்றது தமிழ் தேசியமல்ல 

தேசியம் பேசுகின்ற நாம் 


தேசத்தை நேசிக்க தவறிய நாம் 


தேசம் விற்று ஒரு சோறு வேண்டுமா ?


பிரியங்கன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.