நாளையுடன் மேலதிக வகுப்புகள் தடை!!


 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக , 333,185 மாணவர்கள் பரீட்சார்த்திகளாக பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.