அக்ஷயாவிற்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை!!
திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய புது மனைவிக்கு தனுஷ் போட்ட நிபந்தனை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
புதுமண தம்பதிகளாக வாழ்ந்து வரும் தனுஷ்- அக்ஷயா இருவரும் அவர்களின் காதல் வாழ்க்கை குறித்து அழகாக பகிர்ந்துள்ளனர். இந்த பேட்டியை நடிகை சுஹாசினி எடுத்துள்ளார்.
அதாவது தனுஷின் காதல் லீலைகள் குறித்து அக்ஷயா பேசிய போது, “ கடந்த மே மாதத்தில் தனுஷ் ஈ-மெயில் மூலம் பிரபோஸ் செய்தார், அதற்கு நான் அப்போதே ரிப்ளை கொடுத்து விட்டேன்..” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
பின்னர், “ஒருவருக்கொருவர் பாடல்களை டெடிகேட் செய்துள்ளீர்களா?” என கேள்வி கேட்க, அதற்கு தனுஷ், “இனிமேல் செய்வோம்..” என உற்சாகத்துடன் கூறியுள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பேபி என்றே அழைத்துக் கொள்கின்றனர்.
இதனிடையே, தென்னிந்திய உணவு வகைகள் தனுஷிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பெண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரிய வேண்டும் என்பதே தன்னுடைய முதல் கண்டீஷனாக இருந்ததாக தனுஷ் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கருத்துகள் இல்லை