இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

 


காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் நேற்று (18) மாலை மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் காலி, மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார். உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் மாலை கறுவாத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளார்.


இதனையடுத்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.