வருங்கால கணவர் பற்றிய உண்மையை உடைத்த ராஷ்மிகா!
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி'கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.
பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் வெளிவரவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி புஷ்பா 2 திரைக்கு வரவுள்ள நிலையில், சென்னையில் பிரம்மாண்டமாக படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய ராஷ்மிகாவிடம் பல கேள்விகளை தொகுப்பாளராக இருந்த அஞ்சனா மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் கேட்கும் போது, வருங்கால கணவர் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
உங்களுக்கு கணவராக வர போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா அல்லது வேறு துறையை சேர்ந்தவரா என கேட்டபோது..அதற்கு ராஷ்மிகா, “இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்” என பதிலளித்துள்ளார்.
குறித்த பதில் மூலம் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதை மேடையில் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை