செல்ஃபியால் தொடரும் ஆபத்துக்கள்!

 


பதுளை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில், செல்ஃபி எடுக்க முயன்ற கொரிய சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


நேற்று முன் தினம் (11) இரவு பதுளை நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் வாயில் படியில் தொங்கியவாறு நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போது புகையிரத எல்லையில் உள்ள இரும்பு கம்பத்தில் மோதியுள்ளார்.


காயமடைந்த சுற்றுலா பயணி தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட நபர் ஷோலி டோங் பே என்ற , 61 வயதான கொரிய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொரிய சுற்றுலா பயணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.