ஆர்ப்பாட்டமின்றி சபைக்கு வந்த ஜனாதிபதி அனுர!!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அவைத் தலைவியில் இருந்து பாராளுமன்றத்தில் சமர்க்கிறார்.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகியது.
இந்நிலையில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இன்று முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவுமில்லாமல் ஆரவாரமற்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து சபாநாயகர் அசோக ரங்வெல மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அவரை சபா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகை தந்த நிலையில், மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவும் இடம்பெறவில்லை.
அத்துடன் ஜயமங்கல கீதமும் இசைக்கப்படாது ஆரவாரமற்ற நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
கருத்துகள் இல்லை