அர்ச்சுனா இராமநாதன் : ஒரு அறவியற் சிக்கல்.!
அர்ச்சுனா இராமநாதன் என்ற நபரைத் தமிழ்ச் சமூகம் மறந்து விடுவது நல்லது. தமிழர்களின் இனப் பிரச்சினையை / தமிழின அழிப்பை மறைக்கும் அல்லது திசைமாற்றும் முகமாக அவர் தன் மீது வெளிச்சத்தை விழுத்தி, தன்னைப் பற்றிய கதையாடல்களில் மட்டும் தமிழ்ச் சமூகம் கவனத்தைக் குவிக்கும் வண்ணம் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு எல்லோரும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன அழிப்பை எதிர்கொண்டு அதற்கு மட்டும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்திற்குள் 'ஊழல்' என்ற பிறழ் சொல்லாடலை அறிமுகம் செய்து இன்றைய ஜேவிபி ஆட்சிக்கு வாக்களிக்கத் தமிழர்களை உந்தியது இவர்தான்.
இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா? அல்லது ஆர்வக் கோளாறின் விளைவுகளா? என்பதை இன்றுவரை அடையாளம் காண முடியவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இவரைப் பின் தொடர்வது தமிழ் இனத்திற்குப் பேராபத்து.
எனவே அவரையும் அவர் அடிக்கும் கூத்துக்களையும் பின் தொடராமல் நிராகரிப்போம்.
அவரே ஒரு கட்டத்தில் ஓய்ந்து விடுவார்.
கருத்துகள் இல்லை