கோதுமை தோசை செய்வது எப்படி !!


இது அவசரத்திற்கு செய்யப்படும் உணவாகும். ஆனால் சுவைக்கும், ஊட்டச்சத்திற்கும் குறைவிருக்காது.


தேவையானவை.


கோதுமை மாவு - 2 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

முந்திரி - 5

வேர்கடலை - ஒரு கைப்பிடி

நெய் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு 

நறுக்கிய கறிவேப்பிலை 


செய்முறை :::


வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


வேர்க்கடலை, முந்திரியை நெய் ஊற்றி லேசாக வறுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்க்கவும்.


மேலும், வறுத்த முந்திரி, வேர்க்கடலையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.


ரொம்பவும் நீர்த்து விடக் கூடாது. வேண்டும் என்றால் சிறிது ஆப்பசோடா சேர்த்துக் கொள்ளலாம்.


அடுப்பில் தவாவை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும். சுற்றிலும் நெய் விட்டு திருப்பிப் போட்டு இறக்கவும்.


இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஒரு ஆம்லெட் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். அல்லது கோழிக்கறி குழம்பு அருமையாக இருக்கும்....


 

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.