அர்ச்சுணாவிடம் இருந்து அரசியல் பழகும் நிலை!📸


அர்ச்சுணாவிடம் இருந்து அரசியல் பழக வேண்டிய நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் வந்திருக்கிறார்கள்.


ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் போதே அடுத்த கட்டம் நோக்கி எந்த மனிதனும் சிந்திக்க முடியும். 


சம்பளமற்று இவர்களை வேலைக்கு அமர்த்தும்போது குறைந்தது 10 நாட்கள் உற்சாகமாக கடமைகளை ஆற்றுவார்கள். நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கின்ற போது அந்த கோபத்தை நோயாளிகளிடம் தான் காட்ட நினைப்பவர்கள். இதுவே யதார்த்தம். இதனால் பாதிக்கப்படுவது யார்? 


JVP கட்சியில் போட்டியிட்டு வென்ற Dr. பவானந்தராஜாவிற்கு இந்த பிரச்சனை முழுமையாக தெரிந்தும் அவர் இன்றுவரை அமைதி காத்து இருக்கிறார் அல்லது மறைத்து இருக்கிறார். இதுவும் ஒரு மோசடிக்கு துணை போவதுதான். 


மக்களுக்காக அரசியலுக்கு வந்தால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அதில் இருந்து நழுவக்கூடாது. 


அதேபோல இவர்களுக்கு கல்வி தகைமை இல்லையாயின் இவர்களை வேலைக்கு அமர்த்தும் போது அறிவு எங்கே போனது?


மக்களுக்கு நன்றாக புரிகின்றது. எதற்கு எவரிடம் போனால் பிரச்சனையை தீர்க்கலாம் என்று. மக்களின் விருப்பத்திற்கு மாறாக கம்பு சுத்தினால் சுமந்திரனின் நிலைதான் எல்லோருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.