வலம்புரியின் வெள்ளிவிழா தர்மத்தின் வெற்றி'


வலம்புரி நாளிதழ் தனது வெள்ளி விழாவினை கொண் டாடுவதையிட்டு வாழ்த்து வதில் நான் பெருமகிழ்வடை கின்றேன். நடந்ததை நடந்த படி-நடப்பதை நடக்கும்படி எடுத்துரைப்பது பத்திரிகைத் தர்மம் என்பார்கள். அதனை நன்கு செய்வது வலம்புரி யாகும். அதற்கும் அப்பால் எவர் எதைச்சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல். உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிந்து அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை எடுத்தியம்புவதில் வலம்புரிக்கு தனிச்சிறப்புண்டு.


வலம்புரி கடந்த சில வருட காலத்தில் ஏறக்குறைய அட்டமத்து சனி பிடித்து ஆட்டியது போல் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்ததைக் காண முடிந்தது. இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் தனது தர்மத்தின் பால் நின்ற நற்பலனினாலும் அதாவது தர்மத்தினை நாம் |காத்தால் தர்மம் எம்மைக்காக்கும் (தர்மோ ரக்சதி ரக்ஷித). என்னும் தர்மத்தின் வழியை கடைப்பிடித்ததாலும், இறைய ருளாலும் மக்கள் வலம்புரியில் வைத்த அபரிமிதமான நம்பிக்கையினாலும் வென்றெடுத்து இன்று வெள்ளிவிழா காணுகின்றது என்றால். அது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி விழாவாகும்.


கலியுகத்தில் நல்லது செய்து வெற்றியடைவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். வலம்புரி தானும் தர்மத் தின்பால் நின்று வழுவாது மற்றவர்களையும் தர்மத்தின் பால் நிற்கவைக்கும் திறமை இருக்கின்றது. தனக்கே உரித்தான ஆசிரிய தலையங்கத்தினால் பிரகாசிக்கும் வலம்புரி வெள்ளி விழாக் கொண்டாடும் இவ்வேளையில் பிரதமஆசிரியர் மற்றும் வலம்புரிக் குடும்பத்தினரை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றேன். இறைவனைப் பிரார்த்திக் கின்றேன்.


சிவஸ்ரீ.சரே.வாசுதேவக் குருக்கள்.

குருமுதல்வர், வீணாகானகுருபீடம்.

சரஸ்வதி அம்பாள் உபதேச்திருக்கோவில், சண்டிலிப்பாய்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.