சிக்கன் ப்ரை செய்வது எப்படி!!
தேவையான பொருள்கள் -
சிக்கன் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 50 கிராம்
லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
சிக்கன் 65 பவுடர் - 1 மேஜைக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை -
முதலில் சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். கழுவிய சிக்கன் மீது இஞ்சி பூண்டு விழுது , தயிர், லெமன் ஜூஸ், சிக்கன் 65 பவுடர், உப்பு எல்லாவற்றையும் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போடவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிக்கன் வேகும் வரை கிளறி விடவும். சிக்கன் வேகும் போது தண்ணிர் விடும்.
சிக்கன் வெந்து தண்ணிர் நன்றாக வற்றிய பிறகு அடுப்பை சிறிது கூட்டி கொள்ளவும்.
இரு புறமும் நன்றாக சிவக்கும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் ப்ரை ரெடி. ....
#திண்டுக்கல்சமையல்
கருத்துகள் இல்லை