நாட்டுக்கோழி வறுவல்.!
தேவையான பொருட்கள்
800 கிராம் நாட்டுக்கோழி
300 கிராம் சின்ன வெங்காயம்
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஐந்து காய்ந்த மிளகாய்
நான்கு ஸ்பூன் கரம் மசாலா
ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
தேவையானஅளவு கொத்தமல்லி இலைகள்
இரண்டு கொத்து கருவேப்பிலை
ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய்
சமையல் குறிப்புகள்
நாட்டு கோழியை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் மஞ்சள் சேர்த்து கழுவி அதனுடன் காய்ந்த மிளகாய் கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக விடவும்.
இஞ்சி மற்றும் பூண்டை இடி கல்லில் வைத்து நன்கு இடித்து அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். நன்கு ஆரிய பிறகு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் வேக வைத்த நாட்டு கோழியை சேர்த்து வதக்கவும்.
கோழி வெங்காயம் உடன் சேர்ந்து நன்கு கலந்த பிறகு அரைத்து மசாலா கலவையை சேர்த்து பிரட்டவும். கோழி வேக வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு வேக விடவும்.
கோழி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான என் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்த நாட்டுக்கோழி வறுவல் தயார்
குறிப்பு
1.இந்த வருவளுக்கு நான் வீட்டிலேயே அரைத்த கரம் மசாலா பொடி பயன்படுத்தியுள்ளேன்.
2.நாட்டுக்கோழி வறுவல் நல்லெண்ணெயில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் நம் தாலிக்கும்பொழுதே தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் மறுபடியும் என்னை சேர்த்தால் வருவல் நல்லெண்ணெய் வாசம் வரும்.
3.இதே முறையில் மட்டன் வருவல் செய்யலாம்.
கருத்துகள் இல்லை