கனவா மீன் வருவல் செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள்
கனவா 500 கிராம்
வெங்காயம் 20
பூண்டு எட்டு பல்
இஞ்சி அரை விரல் அளவு
மல்லி இரண்டு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
சோம்பு ஒரு ஸ்பூன்
வர மிளகாய் மூன்று
பட்டை இரண்டு
கிராம்பு இரண்டு
அண்ணாச்சி பூ ஒன்று
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கொத்தமல்லி சிறிது
சமையல் குறிப்புகள்
ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதை வறுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இதை போட்டு அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள் சிறு சேர்த்து உப்பு போடவும்.
எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
கனவாயை சேர்க்கவும். நன்கு வேகும் வரை வேக விடவும்.
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
#மதுரைக்காரிசமையல்
கருத்துகள் இல்லை