சுமந்திரனின் கனவு நனவாகிறது- "இன அழிப்பு போர் அல்ல"!
யுத்தம் முடிந்த பின்னர்,
தெற்கில் இருந்து வடக்கிற்கு அரசியல் வருகை தொடர்ந்தது. சிங்கள, தமிழ் கட்சிகள் அரசியல் நோக்கமாக பலரை கொண்டு வந்தது.
குறிப்பாக தமிழ் கட்சிகள் கொண்டு வந்த சுமந்திரன், விக்கினேஸ்வரன் ஐயா போன்றவர்களை உதாரணமாக கூறலாம்.
இருவரும் திட்டமிட்ட வகையில் தமிழ் தேசியத்தை அழிக்க வந்த சிங்கள சம்மந்திகள் தரப்பு தான். நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நூதனமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்து கூட்டமைப்பை உடைத்து, தமிழ் தேசியத்தையும் அழித்தனர்.
அத்தோடு "இன அழிப்பு போர் அல்ல" என்று சுமந்திரன் சிங்கள பேரினவாத அரசுக்கு பேராதரவாக இருந்தார்.
அதே நேரத்தில் சிங்கள கட்சிகளின் ஒன்றாகி JVP தமது முக்கிய நபர் ஒருவரை வடக்கிற்கு கொண்டு வந்தது. அவர் தான் சந்திரசேகர்.
தெற்கில் இருந்து வடக்கிற்கு வசிக்க வருபவர்கள் ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும். வேலை நியமனம் ஏதாவது வடக்கில் கிடைத்து வரலாம். அல்லது திருமணமாகி வரலாம்.
வேலை நியமனம் என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பம் சகிதம் வசிக்க வர மாட்டார்கள். எனினும் 10 வருடத்திற்கு முன்னர் நீண்ட கால அரசியல் திட்டமிடல் நோக்கத்தோடு JVP சந்திரசேகர் அவர்களை வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டதில் குடி அமர்த்தியது.
JVP உடைய நம்பிகை நட்சத்திரம் ஆகிய அவர் இன்று வடக்கில் இருந்து அமைச்சர் என்ற வகையிலும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற வகையிலும் உள்ளார்..
ஆகவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாமே திட்டமிட்டு நமது இனத்தை அழிக்க உதவினோம்/ உதவுகின்றோம்.
செய்தி:
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக அமைச்சர் சந்திசேகரன் அவர்கள் உத்தியாகபூர்வமாக பதவி ஏற்றார்.
கருத்துகள் இல்லை