பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் குசஸ்தலை ஸ்ரீராமன்!


பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் குசஸ்தலை ஸ்ரீராமன்! பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் குசஸ்தலை ஸ்ரீராமன்!ராமபிரான் தம்முடைய வனவாசக் காலத்தில், இத்தலத்தில் சில காலம் தங்கினார். ராமரும் சீதையும் இங்கே ஓடும் குசஸ்தலை ஆற்றில் நீராடினர்.


பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் குசஸ்தலை ஸ்ரீராமன்! தமிழ்நாட்டில், ராமருக்கெனத் தனிக் கோயில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. அதிலும் மலைக்கோயில் என்பது அரிதான ஒன்றாகும். சென்னைக்கு அருகில், மலையின்மீது ராமர் கோயில் கொண்டிருக்கும் ஓர் அற்புதத் தலம் உள்ளது.


ஊரைக் குளிர்விக்கும் குசஸ்தலை ஆறு, ஊருக்குள் மலைகள்... ஒரு மலையின்மீது ராமன் ஆலயம், மற்றொன்றில் அங்காள பரமேஸ்வரி ஆலயம். இரண்டிற்கும் இடையே முக்தீஸ்வரர் ஆலயம் என மூன்று பழங் கோயில்களை கொண்ட அந்தத் தலம் - எருமை வெட்டிப்பாளையம். இவ்வூரின் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங் கள் அமர்ந்து காவல் புரிவதாக ஐதிகம்.


இத்தலம், சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் சிறப்புடன் விளங் கியதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.


ஜெயங்கொண்ட சோழமண்டலத்து - விக்கிரம சோழ வளநாட்டுப் புழல் கோட்டத் தில் உள்ள ஊராகத் திகழ்ந்ததை இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது (கி.பி. 1507). இதன் மூலம், இங்குள்ள ரகுநாத பெருமாள் ஆலய வழிபாட்டிற்குச் வரிகள் ஒதுக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது.


ராமபிரான் தம்முடைய வனவாசக் காலத்தில், இத்தலத்தில் சில காலம் தங்கினார். ராமரும் சீதையும் இங்கே ஓடும் குசஸ்தலை ஆற்றில் நீராடினர். அப்போது இந்தப் பகுதி யில் வாழ்ந்த மஹிஷாசுரன் எனும் அசுரன், சீதையின்மீது மோகம் கொண்டு, அவளின் திருமேனியைத் தொட வந்தான். இதை உணர்ந்த ராமன், எருமை வடிவம் கொண்ட மகிஷாசுரனை வதம் செய்யும் நோக்கத்தில், ஆற்று தீரத்திலிருந்த தர்ப்பையை எடுத்து நான்காகக் கிள்ளி அவன் மீது ஏவினார்.


அவை அங்காளபரமேஸ்வரி, பொன்னியம் மன், மொலகாத்தம்மன், காட்டு கச்சியாத்தம் மன் ஆகிய நான்கு பெண் தெய்வங்களாக மாறின. அவர்களுக்கு அங்காளம்மன் தலைமை ஏற்றாள். தொடர்ந்து, அந்த அசுரன் வதம் செய்யப்பட்டான். அதனால் இத்தலம் `மஹிஷமர்த்தனபுரி' என்றானது. இதுவே தமிழில் `எருமைவெட்டிபாளையம்' என அழைக்க்கப்படுகிறது என்கிறார்கள்.


மற்றொரு புராணக்கதையும் உண்டு. இந்தத் தலத்து மலையின்மீது ஓய்வெடுத்த ராமர், சீதையின் மடியில் தலைவைத்துக் கண்ணயர்ந்து இருந்தார். அப்போது இந்திர னின் மகன் ஒருவன், காக உருவில் வந்து சீதையைத் தன் அலகினால் குத்தினான்.


ராமபிரான் விழித்தெழுந்தார். ஒரு தர்ப்பை யைக் கிள்ளி காக வடிவிலிருக்கும் இந்திரனின் மகன் மீது ஏவினார். அது சக்கராயுதமாக மாறி, அந்தக் காகாசுரனின் ஒரு கண்ணைத் தாக்கியது. தர்ப்பையை வடமொழியில் குசம் என்பார்கள். ஆக, குசமாகிய தர்ப்பை வளை வளைந்து காகாசுரனைத் துரத்திய பாதையே, நீர் நிரம்பிய குசஸ்தலை ஆறானது எனும் திருக்கதை உண்டு. அதேபோல், ராமகிரியைத் தழுவியபடி ஓடியதால், அந்த நதி உத்தரவாகினி ஆனது.


ராமன் ஆலயம் இருக்கும் மலையின்மீது, முற்காலத்தில் கார்கேயர் என்ற முனிவர் நாராயணரை நோக்கித் தவமிருந்தார். பல ஆண்டுகளாக நீடித்தது அவரின் தவம். மந் நாராயணன் காட்சி தந்து, அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அந்த முனிவர், “இத்தலத்திலேயே தாங்கள் ராமராக சீதையுடன் எழுந்தருளி இப்பூவுலக மக்களைக் காத்தருள வேண்டும்'' என்று வேண்டினார். அதன்படி, இத்தலத்தில் ராமரும் - சீதையும் கோயில்கொண்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.


ராமன் கோயில்கொண்டிருக்கும் எழில்மிகு குன்று, குசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. அதன் உச்சிக்கு செல்ல கருங்கல் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இங்குள்ள மூலவர் ராமர், சீதா பிராட்டியைத் தன் மடியில் இடதுபுறம் அமர்த்தி, அந்த அன்னையை அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். வேறெங்கும் காண்பதற்கரிய வடிவமாக... மூன்றடி உயர சாளக்கிராமத்தில் இவரின் திருமேனி உருவாக்கப்பட்டுள்ளது.இது, பிரசித்திபெற்ற பத்ராசலம் தலத்தில் உள்ளது போன்ற அமைப்பில் திகழ்வது குறிப்பிடத்தக்கது.


ராமரின் அருகே லட்சுமணன் கையில் வில்லேந்தி நிற்கிறார். இது, உலோகச் சிலை போல் அமைந்துள்ளது. ஆஞ்சநேயரும் பணிவுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயத் தில் மந் நாராயணனுக்குச் சிறிய சந்நிதியும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், சேனை முதலி ஆகியோர் சிற்பங் களும் அமைந்துள்ளன.


இக்கோயிலின் உற்சவர் கோதண்டராமர் என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் வில்லேந்தியக் கோலத்தில் காட்சி தருகின்றார். இவரை வைத்தே இக்கோயிலின் பெயர் கோதண்டராமர் கோயில் என்று ஆவணப் பதிவில் உள்ளது.


ராமபிரான் சீதையைக் காத்தது போன்று, நம்பிக்கையோடு இவ்வாலயம் வந்து தன்னை வழிபடும் பெண்களுக்கும் அபயமளித்து அருள்பாலித்து வருகிறாராம். அப்படி வரும் அன்பர்களின் வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றும் தெய்வமாகவும் அருள்கிறார், இந்த ராமபிரான்.


மட்டுமன்றி திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாகவும் விளங்குகிறது!


இந்தத் தலத்தில், முக்கிய வேண்டுதலாக... பக்தர்கள் நீலத்துணியை ராமருக்குச் சாத்தி, சங்கு புஷ்பத்தையும் சமர்ப்பிக்கின்றனர். இதன் மூலம் தங்களின் வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறுவதாக பக்தர்கள் முழுமை யாக நம்புகின்றனர். இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளது. திருப்பணி நடந்து வந்தாலும், பொருளாதாரக் குறைவால் மந்தகதியில் நகர்கிறது.


பக்தர்கள் இயன்ற பங்களிப்பை வழங்கி னால், திருப்பணிகள் வேகம் பெறும்; ராம பிரான் விரும்பி குடியிருக்கும் இந்தக் கோயி லும் விரைவில் பொலிவுபெறும்.


எப்படிச் செல்வது?: திருவள்ளூர் மாவட் டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது எருமைவெட்டிப்பாளையம்.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரம். சென்னை கோயம்பேட்டில் இருந்து 37 கி.மீ. தொலைவு. கிளாம்பாக்கம் அல்லது கோயம்பேட்டிலிருந்து செங்குன்றம் வழியே காரணோடை வர வேண்டும். பின் அங்கிருந்து எருமைவெட்டி பாளையம் செல்ல வேண்டும். கோயம்பேடு, ரெட்ஹில்ஸ் பகுதிகளிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.