சிக்கன் ப்ரைட் ரைஸ்.!


தேவையான பொருள்கள்
 


பாஸ்மதி அரிசி - 2 கப்

சிக்கன் - 200 கிராம்

பீன்ஸ், காரட், கோஸ், காப்சிகம் - 1 கப்

பூண்டு - 3

சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி

சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி

மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி

முட்டை - 2

ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி 

செய்முறை -

சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்களை நீளமாக வெட்டி கொள்ளவும். பூண்டை துருவி கொள்ளவும்.

அரிசியில் தண்ணீர், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து சாதத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு நன்கு வேகும் வரை ப்ரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயை கழுவி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.

வாயகன்ற கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும். அதன் பின் காய்களை போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள் -

அஜினமோடோ உப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.

சாதம் மிச்சமானால் அதை ப்ரைட் ரைஸ் செய்ய உபயோகிக்கலாம்.

காய்கள் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது....


#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #Tamilarulmedia #திண்டுக்கல்சமையல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.