இந்தியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் இந்த வரவேற்பினை அளித்துள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமாரவின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் பரவலாகச் செய்திகளைப் பிரசுரித்திருந்ததுடன் புதுடில்லி நகரின் சுற்றுப்புறங்களில் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை