தமிழ்அருள் வாசகர்கள் அணைவருக்கும் இனிய கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்!
பாலன் பிறப்பிலே
பாவங்கள் கரையவும்.
பார்வையின் மொழியிலே
பாசங்கள் கனியவும்.
ஊனுடல் நோய்நீங்கி
உறவுகள் தேறவும்.
வான்மழை பொழிந்து
வையகம் ஊறவும்.
பஞ்சம் பறந்தோடி
பிஞ்சுகள் ஆளவும்.
கஞ்சா கசிப்பு
காமச்செயல் அழியவும்.
ஏழைகள் இல்லாது
எல்லோரும் வாழவும்.
நாளை எமக்கொரு
நாடு மலரவும்.
புண்பட்டுப்போன
பண்பாடு மீளவும்.
மண்மீட்பு மாவீரரின்
மனக்கனவு கனியவும்.
வண்டமிழ் செழித்து
வல்லமை கொள்ளவும்
அண்டத்தின் இறையே!
அமைதியைத் தருக!
அனைவரும் அன்புநிறைந்த
வாழ்த்துகளைப் பெறுக!
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை