வாகன இறக்குமதிக்கு அனுமதி!!
2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு உரையாற்றிய இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே,
எதிர்வரும் பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும், ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு விஞ்ஞாபனமாக வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை வழங்கியுள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், இதன்மூலம் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தைப் பெற முடியும்.
வாகன இறக்குமதிக்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக நிதி அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.
இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 ஆண்டுகளாக அனாதரவாக உள்ளனர், இங்குள்ள வியாபாரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

.jpeg
)





கருத்துகள் இல்லை