தமிழரசின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!📸
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், காணி விடுவிப்பு மற்றும் காணி அபகரிப்பை நிறுத்துதல், தேசிய
இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#shritharan #sritharanmp #AKD #ANURAKUMARADISSANAYAKE
கருத்துகள் இல்லை