இனவெறியர்களுக்கு முன்னால் போராட்டம்!📸
நேற்று தையிட்டியில் தமிழர் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய தமிழர்களை சிறிலங்காவல்துறை வன்மமாக அச்சுறுத்தி அடித்து அடக்க நினைத்த கொடுமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டும்!
கொடிய சிறிலங்கா காவல்துறையின் கொடூரமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வீரமுள்ள தமிழர்களாக அஞ்சாமல்ப் போராடிய உணர்வாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து ஆண் பெண் தமிழ்த் தேச மக்கள் முன்னணியினர், அடிவாங்கியும் நில அபகரிப்பிற்கு எதிராக துணிவோடு போராடிய காணி உரிமையாளர் மற்றும் நீதிக்காக போராடிய மக்கள் அனைவரிற்கும் பாராட்டுகள்!
ஒரு தமிழன் மேல் வீழ்ந்த அடி ஒட்டுமொத்த தமிழர் மீதானதுமே எனத் தமிழினம் துடித்தெழ வேண்டும்!
போராடும் எம் தமிழ் மக்களிற்கு இனவுணர்வுள்ள உலகத் தமிழனம் வலிமையாக நின்று துணை நின்று குரல் கொடுக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை