மாரடைப்பால் வவுனியாவில் 45 பேர் இறந்துள்ளதாகத் தகவல் !

 


வவுனியா பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60 வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேரும் என 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.