Clean Sri Lanka ஜனாதிபதி செயலணியில் தமிழ் பேசுவோர் எவரும் இல்லை !
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
18 பேர் கொண்ட இந்தச் செயலணியில் எந்தவொரு தமிழ்பேசுவோருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை