தரம் ஒன்று மாணவர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை!!

 


அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து கோட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி/ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் (ஆரம்ப வகுப்புக்கள் நடைபெறும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள்) ஆகியோறுக்கு அறிவிக்கும் முகமாக கல்வி அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த சுற்றறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


1 . 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல் பாடசாலைகளில் 2025ம் ஆண்டில் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தாம் ஒன்றிற்கான வகுப்புக்கள் 2025.01.30 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2. அதற்கமைய 2025 தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களின் வகுப்புக்களை உய முறையில் ஆரம்பித்து வரவேற்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தினை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


எல்லாச் சந்தர்பங்களிலும் புதிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெறல் வேண்டும்.


அத்துடன் மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ்வேலைத்திட்டத்தை ஒழுங்கமைப்பதை கவனத்தில் கொள்ளவும்.


இதன்போது ஆரம்பக்கல்வியின் நோக்கம், ஆரம்பக்கல்வியின் முதன்மை நிலைகள், ஆரம்பக்கல்வியில் தேர்ச்சி அடிப்படையிலான கலைத்திட்டம், பிள்ளைகளின் உடல் உள விருத்தி, அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் மற்றும் விருப்பத்திற்குதிய தேர்ச்சிகள், கணிப்பீடு மற்றும் பிள்ளையை இனங்காணும் வேலைத்திட்டம் தொடர்பாக தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களது பெற்றோருக்கு இலகுவாக விளங்கிக கொள்ளும் வகையில் தெளிவுபடுத்துவது மிக முக்கியமாகும்.


3. மேலும் 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக "பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம்" 2025.01.31 வெள்ளிக் கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டு 2025.02.17 செவ்வாய்கிழமை வரையில் 10 நாட்களில் நிறைவு செல்லுவேண்டும்.


இக்காலத்தை உச்ச அளவில் பயன்படுத்தி மிகவும் நம்பகத் தன்மையுடன் கூடியதாக "பின்ளைகளை இளங்காணும் நிகழ்ச்சித்திட்டம்" நடைமுறைப்படுத்துவது அனைத்து அதிபர்களினதும் பொறுப்பாகும் என்பதை தயவாக அறியத்தருகின்றேன்” என்றுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.