மின் கட்டண திருத்தம்!!
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு இன்று மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும், ஊவா மாகாணத்தில் டிசம்பர் 30 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் ஜனவரி 3 ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் ஜனவரி 10 ஆம் திகதியும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு முன்னர் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை