தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி !
தேவையான பொருட்கள்
▢1 கப் பாசுமதி அரிசி ▢1½ கப் தேங்காய் பால் ▢கருவேப்பிலை கொஞ்சம் ▢2 பட்டை ▢2 கிராம்பு ▢1 ஏலக்காய் ▢நெய் தேவையான அளவு ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
▢ முதலில் தேவையான தேவையான அனைத்தும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.
▢ அரிசியை 30 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
▢ அடுத்து அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து தாளிக்கவும்.
▢ பின்பு ஊறவைத்த அரிசியை பூட்டு கிண்டவும்.
▢ அடுத்து தேங்காய் பாலை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மிதமான தீயில் வேக விடவும்.
▢ சாதத்தில் உள்ள பால் வற்றி மேலே சாதம் தெரியும் போது தீயை சிறிதாக்கி பேப்பரை போட்டு மூடி 15 நிமிடம் தம்மில் விடவும்.
▢ 15 நிமிடம் கழித்து இறக்கவும். இப்பொழுது சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
#திண்டுக்கல்சமையல்2
கருத்துகள் இல்லை