வேதாகமத்துடனும் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!📸


 ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பரிசுத்த வேதாகமத்துடனும் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். 


கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் 1861இல் பயன்படுத்திய பரிசுத்த வேதாகமத்தையும் இணைத்து பதவியேற்றுக்கொண்ட அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். 


அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக 20.01.2025இல் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இரண்டு பரிசுத்த வேதாகமத்தை வைத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. 



 இதில் ஒரு வேதாகமம் இவருடைய தாயார் இவருடைய எட்டு வயதில் கொடுத்த பரிசுத்த வேதாகமம் என்று சொல்லப்படுகின்றது. மற்றைய பரிசுத்த வேதாகமம் 1861இல் அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் பயன்படுத்திய அல்லது பதவிப்பிரமாணம் செய்த பரிசுத்த வேதாகமம் என்று சொல்லப்படுகின்றது. 


 இரண்டு வேதாகமங்கள் இவரின் பதவிப்பிரமாணத்தின் போது துணைவியார் கரங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 



டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


அமெரிக்காவில் ஈழத்தமிழர்கள் உள்ளடங்கலாக பெருந்தொகையான இந்தியர்களும் தத்தமது கலாசாரத்துடன் வாழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.