இலங்கையில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அத்துடன் நோய்கள் பரவி வருவதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.