மல்லி சிக்கன் செய்முறை!
சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. செய்து பார்த்து சுவையை அனுபவியுங்களேன்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் -1 கிலோ
கொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
வெங்காயம் -3 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
தயிர் – 250 மில்லி லிட்டர்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.
மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி...
கருத்துகள் இல்லை