வடமராட்சி - தென்மராட்சியை இணைக்கும் வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை!
யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் முக்கியமான வீதியில் அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் போக்கு வரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது
தென்மராட்சி வரணி மாசேரிப் பகுதியையும் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியையும் இணைக்கும் இவ்வீதியானது இரு பகுதி மக்களுக்கும் பெரிதும் பயன்படுகின்|றது.
விவசாயிகள்,வியாபாரிகள் தமது தொழில் நிமிர்த்தம் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்,அத்துடன் பல்வேறு தேவைகளுக்காக தென்மராட்சி பகுதி மக்கள் வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் தென்மராட்சிப் பகுதிகளுக்குச் செல்வதற்கும் அன்றாடம் பயன்படுத்தும் வீதியாக இது காணப்படுகின்றது.
இந்த நிலையில் மழை காலங்களில் குறித்த வீதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் தமது போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.
நீண்ட காலமாகப் புனரமைப்புச் செய்யப்படாது வெள்ள நீர் தேங்கி காணப்படும் இந்த வீதியை புனரமைத்து தமது போக்குவரத்துக்களுக்கான வசதிகளை விரைந்து செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை