13 இந்திய மீனவர்கள் அதிகாலை வேளைகடற்படையினரால் கைது !

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட


கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மீனவர்களுக்கு காயம் என்பதால் மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை போலீஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.