அஜித் டீம் 3 வது இடம்!
இந்த எண்டுறன்ஸ் கார் ரேஸ் வித்தியாசமானது .வழக்கமா ஓட்டும் ஒரு சர்க்யூட்ல 20 lap, 30 lap ரேஸ் இல்லை இது !
இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ். அதாவது 24 மணி நேர ரேஸ், இன்னிக்கு மத்தியானம் 1 மணிக்கு கார் எடுத்தா, அடுத்த நாள் மத்தியானம் 1 மணி வரைக்கும் ஒட்டனும். ஒரு டீம்ல 3ல இருந்து 5 டிரைவர் வரைக்கும் இருப்பாங்க, அவங்க மாத்தி மாத்தி ஒட்டணும், ஒரு டிரைவர் குறைந்தது 2 மணி நேரம் ஓட்டணும், 24 மணி நேரம் இருக்கேன்னு மெதுவா எல்லாம் ஓட்ட முடியாது, ஆவரேஜ் ஸ்பீட் அந்த டிராக்ல 240 கிலோ மீட்டர். இந்த ஸ்பீட்ல 24 மணி நேரம் ஒட்டறது சாதாரண விஷயம் இல்லை.
வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை இந்த ரேஸ், 24 மணி நேரம் ஓடற அளவுக்கு கார ரெடி பண்ணனும், அதுல மைலேஜ், டையர், மெக்கானிகல் ப்ராப்ளம் வராம பாத்துக்கணும், அதுக்கு ஒரு மெக்கானிக் டீம் இருக்கும். ஆவரேஜ் பிட் ஸ்டாப் டைம் 45ல இருந்து 55 செகண்ட், இதுலதான் பெட்ரோல் போடறது, டிரைவர் மாத்தறது எல்லாம் பண்ணனும்
தொடர்ந்து பல மணி நேரம் குறைந்தது 240 கிலோமீட்டர் ஸ்பீட்ல ஓட்ட கடுமையான பயிற்சி தேவை, அப்படி தொடர்ந்து 6 மணி நேரம் ஓட்டி பயிற்சி எடுக்கும்போதுதான் அஜித் கார் ஆக்ஸிடென்ட் ஆச்சு.
எந்த டீம் 24 மணி நேரத்துல அதிக தூரம் ஓட்டி இருக்காங்களோ, அதாவது அதிகமான லாப், அவங்கதான் வின்னர்.
Sdat logo வுடன் பங்குபெறும் அஜித் டீம் 3 வது இடம் பிடித்திருக்கு வாழ்த்துகள்♥️♥️♥️🙏
கருத்துகள் இல்லை