அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசித்துவரும் மஜிதா பிரபாகரன் தம்பதிகளின் புதல்வன் கீரன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டி
பெற்றோரினால் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாலைநேர இலவசக் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு
அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்துள்ளதோடு தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
தமது மகனின் அகவை தினத்தில் ஏழை மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி மகிழும் நல்லுள்ளம்கொண்ட பெற்றோருக்கு
பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை