டோட்மூன்ட் தமிழர் அரங்க பொங்கல் விழா-யேர்யனி!📸
யேர்மனியில் டோட்மூன்ட் மாநகரில் திருவள்ளுவர் சிலையை நிர்மானித்த அமைப்பு தமிழர் அரங்கம் இன்று மாலை பொங்கள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
மாலை 16.00மணிக்கு பொங்களோ பொங்கள் என ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகச்சிறந்த மகிழ்ச்சிகரமாக மத்தாப்பு வாணவேடிக்கைகள் கொளுத்தி மகிழ்ந்தனர். தொடர்ந்து கலைநிகழ்வுகளும் சிற்றுரைகள்,நடனங்கள் சிறப்பாக இடம்பெற்றது.
தை பொங்கல் விழா என்பது மதம் சார்பற்ற தமிழர்கள் திருநாள். உணவு அறுவடைத் திருநாள்,உழவர் திருநாள்,உழைக்கும் மக்களின் பெருநாள் என விளக்கமளித்தார் திரு.வி.சபேசன் அவர்கள். நிகழ்ச்சி இனிதே 21.00மணியளவில் நிறைவேறியது.
கருத்துகள் இல்லை