பிறந்த குழந்தையைக் கொன்ற தாய்!!
யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் பிறந்து ஒரு நாளே ஆன சிசு ஒன்றின் சடலம் தொப்புள் கொடியுடன் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் இன்று மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதடி பகுதியில் தோட்ட வேலை செய்பவர்கள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றடிக்குச் சென்ற வேளை கிணற்றில் பிறந்த சிசுவின் உடல் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு உடனடியாக கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கி அவர் மூலமாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குவந்த பொலிசார், சடலத்தை பரிசோதித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
இதற்கமைய, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான, 3 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கொலைக்கு உதவி செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு நாம் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். கொலைக்குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள மூவருமே பெண்கள்.
மகா பாதமான கொலையை அதுவும் பிறந்த சிசுவைக்கொல்லத் துணிகிற அளவிற்கு மனங்களில் ஈவிரக்கம் அற்றுள்ளது என்பதை நினைக்கும் போது. இந்த நிலைமை எங்கு கொண்டு செல்லுமோ என்கிற அச்சம் எழுகின்றது.
பெருகி வருகிற பாலியல் இச்சைகள் இவ்வாறான சிசு மரணங்களுக்கு வழி ஏற்படுத்துகிற அவலத்தை என்னவென்று சொல்வது...
மழலைச்செல்வமற்று மண் மீது எத்தனையோ பேர் தவமிருக்க இவ்வாறான துயரங்களும் நிகழ்ந்துகொண்டு இருப்பது வேதனை தருகிறது....
கருத்துகள் இல்லை