ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்!!
நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாகவே அமைந்தது என்று சொல்லலாம். விவாகரத்து, சர்ச்சை, அடுத்தடுத்து படங்களின் தோல்வி என துவண்டு போயிருந்தார் நடிகர் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி, இனி என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் ரவி மோகன் என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது instagram பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசாத்திய நம்பிக்கை அளவற்ற கனவோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில் உங்களிடம் என் வாழ்க்கையில் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தன் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போது எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில் தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள் அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.
இந்த நாள் தொடங்கி நான் ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்தப் பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் துறை கனவுகளை முன் நோக்கி எடுத்துச் செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி யாரும் வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திரை துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையானவர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டு வர உதவும்.
அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும் ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது நான் பெற்ற அன்பையும் ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பாக மாற்றும் எனது இதயபூர்வமான முயற்சி.
தமிழ் மக்கள் ஆசியுடன் என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று என்னை அழைக்குமாறு புதிய துவக்கத்திற்கு தாங்கள் ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஊக்கம் நான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திற்கு உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அந்த அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை