ஆலயத்திற்கு வருகை தந்த கனேடியப்பிரதமர்!!
கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் முதன் முதலாக நிறுவப்பெற்றதும் 50 வருட கால வரலாற்றைக் கொண்டதுமான, கனடா ரிச்மண்ட் ஹில் விநாயகர் ஆலயத்திற்கு முதற்தடவையாக விஜயம் செய்த கனடியப் பிரதமர் என்ற பெயரைத் தட்டிக் கொண்டார்.
கடந்த17-01-2025 வெள்ளிக்கிழமை அங்கு விஜயம் செய்து நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என அனைவரது வரவேற்பையும் அன்பையும் தனதாக்கிக் கொண்டார்.
ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மத்திய அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அழைப்பை ஏற்று அன்றைய தினம் மேற்படி ஆலயத்திற்கு வருகை தந்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் முதலின் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவர் மற்றும் அங்கத்தவர்களால் வரவேற்கப்பெற்று ஆலய மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பெற்றார்.
அங்கு சிவாச்சாரியப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்டு கௌரவிக்கப்பெற்றார்.
அதன் பின்னர் அங்கு அமைக்கப்பெற்றிருந்த விசேட அலங்காரம் செய்யப்பெற்றிருந்த இடத்தில் பிரதமரையும் அமைச்சரையும் அறங்காவல் சபையின் தனாதிகாரி காந்தன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து ஜஸ்ரின் ட்ரூடோ உரையாற்றுகையில்,
ஒன்றாரியோ வாழ் தமிழ் மக்கள் சார்பில் பிரதமர் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் சார்ந்த பல முக்கியமாக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து குரல் கொடுத்தும் அதேவேளை
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக 2009 வரைக்கும் மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களும் படுகொலைகளும் 'இனப்படுகொலை' என்ற பகுதிக்குள் அடக்கப்பெற்று அதற்கான பொறுப்புக் கூறலை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும்,
தனது பதவிக்காலத்தில் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுத்த ஒரு நேர்மையான அரசியல் தலைவரே எமது பிரதமர் என்று குறிப்பிட்டு தொடர்ந்து உரையாற்றும் வண்ணம் பிரதமரிடம் வேண்டிக் கொண்டார்.
அங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பெற்ற இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும் முதல் கனடியப் பிரதமர் என்ற பெயரை எனக்கு தந்துள்ளீர்கள். அதற்கு நன்றி.
இந்த அழகிய ஆலயத்தில் தாங்கள் அனைவரும் சேர்ந்து எனக்களித்த வரவேற்பை நான் என்றும் மறந்து விடமாட்டேன். எங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.
அதைப் போலவே ஒரு தேசத்திற்கும் காலங்கள் மாறும் போது போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். வீதிகளுக்கு இறங்கி போராடிய உங்களைப் போன்ற தமிழ் மக்களுக்கு இது நன்றாகப் புரியும் என்று நான் நம்புகின்றேன். எனவே நாம் வெற்றியடையும் வரை போராடுவோம்' என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை