போலி வைத்தியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!!
9 மாகாணங்களிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
"வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள்.
அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தயாரித்து எவரும் மருத்துவத்துறைக்குள் உள்நுழைய முடியாது.
மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது." - என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை