கரையொதுங்கிய அரிவகை மீன்!!
அம்பாறை மாவட்ட மருதமுனை கடற்கரையில் டொல்பின் மீன் ஒன்று நேற்றையதினம் (16-01-2025) மாலை கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய டொல்பின் மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்ததாக உள்ளது.
குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை