சபலெங்காவை எதிர்கொள்ளும் மேடிசன் கீஸ்!

 


மெல்போர்னில் வியாழன் அன்று (23) நடந்த அவுஸ்திரேலிய ஓபனின் த்ரில்லர் ஆட்டத்தில் உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையான இகா ஸ்விடெக்கை வீழ்த்தி, மேடிசன் கீஸ் தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டினார்.


அரையிறுதி ஆட்டத்தில் 29 வயதான அமெரிக்க வீராங்கனை போலிஸ் வீராங்கனையை 5-7, 6-1, 7-6(8) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.


2017 இல் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் சக அமெரிக்கரான ஸ்லோன் ஸ்டீபன்ஸிடம் தோல்வியடைந்த கீஸ், சனிக்கிழமை (25) நடைபெறும் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலெங்காவை எதிர்கொள்வார்.


இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர், தனது முதல் மேஜர் பட்டத்தை வெல்வார்.


சபலெங்கா முதல் அரையிறுதியில் 11 ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் பவுலா படோசாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.