மோசமாக நடந்த சுற்றுலா பயணிகள்!!

 


கொழும்பு - வாதுவை பகுதியில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் விருந்தினர் தொடர்பாடல் பிரிவின் பெண் அதிகாரி ஒருவர் போலந்து  சுற்றுலா பயணிகளின் முறைகேடான நடத்தையால் காயமடைந்துள்ளார்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது,


கடந்த 19 ஆம் திகதி ஹோட்டலின் நீச்சல் குளத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழுவினர் குடிபோதையில் நிர்வாணமாக இருந்துள்ளனர்.


இதன்போது, 40 வயதுடைய பெண் அதிகாரி சுற்றுலாப் பயணிகளை குளத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.


இதனால் கோபமடைந்த போலந்து நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவர் அவரை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளியதால் பெண் அதிகாரிக்கு எலும்பு முறிவு மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து போலந்து நாட்டு சுற்றுலா பயணிகள் குழு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


அதேசமயம் சம்பவத்தை தொடர்ந்து பெண் அதிகாரி மீது ஹோட்டல் நிர்வாகமும் போதிய கரிசணை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாணந்துறை தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.