சுற்றுலா விசாவில் வருபவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை!!
நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற சபை அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கடந்த காலங்களில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் 25,514 இஸ்ரேல் நாட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் இஸ்ரேல் நாட்டவர்களாக அவர்களின் வருகை பதியப்பட்டுள்ளது.
எனினும் ஆயுதப் படைகள் என்ற வகைப்படுத்தலுடன் தகவல் பதிவாகததால் எந்தவொரு நபர் தொடர்பிலும் இவ்வாறான வகைப்படுத்தல் இடம்பெறமாட்டாது. நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லை.
எனினும் இஸ்ரேல் நாட்டவர்கள் மாத்திரமன்றி, பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை ஒரு பிரச்சினையாக அடையாளம் கண்டுள்ளதுடன், அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் கலந்துரையாடி வருவதுடன் அவற்றை நிறுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றையும் வகுத்துள்ளோம்.
இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேல் நாட்டவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் வர்த்தக தொழிற்துறைகளை ஆரம்பிப்பது போன்ற முதலீட்டு வேலைத்திட்டங்களுக்கு விசா அனுமதிப்பத்திரத்தை வழங்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்காது.
2020ம் ஆண்டிலிருந்து இதுவரை செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரேல் நாட்டவர்கள் பொலிஸ் நிலையமொன்றில் அல்லது ஏனைய செயற்பாட்டு பிரிவுகளில் தடுத்து வைக்கப்படவில்லை.
விசா இல்லாத ஒரு இஸ்ரேல் நாட்டவர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளார். எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
விசேடமாக அறுகம்பை சம்பவத்துடன் கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கமைய குறித்த பிரதேசத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை