சம்மாந்துறையில் முன் பள்ளி பிள்ளைகளின் போசாக்குணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்!📸.
முன் பள்ளி பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தை விருத்தி செய்யும் நேற்று (03) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ். எல். எம். ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 22 முன் பள்ளிகளைச் சேர்ந்த 502 பிள்ளைகளுக்கான போசாக்குணவு வழங்க முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், 22 முன் பள்ளிகளின் ஆசிரியைகள் மற்றும் உணவு வழங்குனர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், மேற்படி திட்டத்தை எதிர்வரும் (05) புதன் கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இன் நிகழ்விற்கு வளவாளராக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான்,டி. தினேஸ் போன்றவர்கள் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை