வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும்!


நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

அத்துடன், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.