யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!📸

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம். புதிய கட்டிட தொகுதி ஒன்றை அமைப்பதன் அவசியம் பற்றி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது..


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.


இந்த விடயத்தை கருத்திற் கொண்டு, இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்களிடம், ஆளணியை அதிகரிக்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தும் கோரிக்கை கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.


வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நோயாளர்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கும், தேவையான மனிதவள ஆதாரங்களை முழுமையாக வழங்குவது அவசியமாகும். எனவே, இக்கோரிக்கை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். 


உரிய அதிகாரிகள் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.