இராணுவ அதிகாரத்தின் கீழ் தான் வடக்கு கிழக்கு இருக்கின்றது!
அண்மை காலமாக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களை இலக்கு வைத்து பல்வேறு தளங்களிலும் அவதூறு பரப்ப படுகின்றது
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் இனப்படுகொலை நடக்கவில்லை என தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக பதிவு செய்ததாக குற்றசாட்டுகளை அள்ளி வீசுகின்றார்கள்
ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் கைது செய்ய செய்யப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உட்பட்ட வைத்தியர்களும் 100 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பொய் சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்த படுத்தப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP) ஆவணப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இராணுவ புலனாய்வு பணிப்பாளராகவிருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வைத்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் மிக கடுமையாக அச்சுறுத்தியதாக ITJP’ நிறைவேற்று பணிப்பாளர் Yasmin Sooka பதிவு செய்து இருக்கின்றார்
நீண்டகால தடுத்து வைத்தல், உளவியல் சித்தரவதை, மருத்துவ சிகிச்சை மறுப்பு போன்ற நெருக்கடிகளை வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உட்பட்ட வைத்தியர்கள் சந்திக்க நேர்ந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
குறிப்பாக இறுதி களத்தில் வெறும் 650 மட்டுமே இறந்ததாக பதிவு செய்யுமாறு வைத்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது
சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள இந்த உண்மைகளை மறைத்து விட்டு வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இனப்படுகொலை குறித்து தவறான வாக்குமூலம் வழங்கினார் என் தகவல் பரப்ப வேண்டி ஏன் வருகின்றது என்று தெரியவில்லை
உண்மையில் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் இராணுவ அதிகாரத்தின் கீழ் தான் வடக்கு கிழக்கு இருக்கின்றது என்பதை வெளிநாடுகளிருந்து வீரம் பேசும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இராணுவ கட்டமைப்பை மீறி யாரும் சுயாதீனமாக சிவில் நிர்வாக அதிகாரிகள் இயங்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
தமிழமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே ஒரு காரணத்திற்க்காக பேராசிரியர் விக்கினேஸ்வரன் புலனாய்வாளர்கள் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
அந்த அழுத்தங்களினால் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இறந்து விட அவரின் குடும்பம் அனாதையாக நிற்கின்றது
விஞ்ஞாபன பீட கண்டி நடன சர்ச்சை காரணமாக பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இரு தடவைகள் துணைவேந்தர் பதவி பெற முடியாமல் புலனாய்வாளர்கள் தடை செய்யப்பட்டார்
பின்னர் இராணுவ அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொண்ட பின்னரே அவர் துணைவேந்தராக்க பட்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைத்தெறியப்பட்டது
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த கலாநிதி குருபரன் பல்கலை கழகத்தை விட்டே பதவி திறக்க வேண்டி வந்தது
யாழ்ப்பாண வைத்தியர் சிவரூபன் அவர்களின் நிலைப்பாடு காரணாமாக பல மாதங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையி்லடைக்கப்பட்டிருந்தார்
குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதிபதி திரு சரவணபவன் நாட்டை விட்டே வெளியேற வேண்டி ஏற்பட்டது
ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் நீதித்துறையில் 28 ஆண்டுகள் கடமையாற்றிய திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் மேன் முறையீட்டு நீதிபதியாக நியமிக்க பட தகுதியிருந்தும் இழுத்தடிப்புக்களால் ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவங்களின் பின்னணிகளை புரிந்து கொள்ளும் யாரும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மீதான அரசியல் ரிதியான காரணங்களை அடிப்படையாக கொண்டு அவதூறுகளை வீச முடியாது
குறிப்பாக ஒருவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக அவரை ஆதாரமின்றி அவமானப்படுத்த முயற்சிப்பது சனநாயக அரசியலின் மிக பெரிய அவலமாகும்
குறிப்பாக புலம் பெயர் தளங்களில் தமிழ் தேசிய (?) ஆதரவாளர்களாக தங்களை அடையாளபடுத்தும் சிலர் சமூக தளங்கள் ஊடாகவும் அர்ச்சனா இராமநாதன் ஊடாகவும் பரப்புகின்ற அவதூறுகள் எல்லை மீறியிருக்கின்றன
இதற்காக பல லட்சங்களில் பணத்தையும் செலவளிக்கின்றார்கள
அர்ச்சனா இராமநாதனின் தன்னை மையப்படுத்திய சமூக பிறவாழ்வான நடவடிக்கைகளை கூட இவர்கள் நியாப்படுத்துகின்றார்கள்
மறுபுறம் ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னரும் வடக்கு கிழக்கை எப்போதும் கொதி நிலையில் வைத்திருக்க இராணுவ புலனாய்வு வலையமைப்பின் எண்ணத்தில் கூட எந்த மாற்றமும் தெரியவில்லை
கடந்த காலங்களில் கிறீஸ் மனிதர் , ஆவா குழுக்கள் என பல்வேறு விடயங்களை கட்டவிழ்த்து விட்ட புலனாய்வு வலையமைப்பு ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் தமிழ் சிவில் நிர்வாகம் மீதான சமூக தள தாக்குதல்களாக தங்கள் செய்முறைகளை கூர்மைப்படுத்தி உள்ளது
இதற்கு ஒரு கருவியாக மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயுடன் சேர்ந்து இயங்கிய ஒரு வைத்திய துறை சார்ந்த ஒரு பணிப்பாளர் ஒருவர் ஊடக அர்ச்சனா இராமநாதனை இயக்க முயற்சிக்கின்றார்கள்
இங்கே வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உட்பட எந்த வைத்தியர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ மோசடிகளில் ஈடுபட்டு இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து தண்டனை பெற்று தர முடியும்
நீதிமன்றம் கூட இது தொடர்பாக உத்தரவு வழங்கி பல மாதங்கள் கடந்து விட்டது
இப்போது கூட அர்ச்சனா இராமநாதன் ஊடக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மீதான குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்களை பாராளமன்ற சபாபீடத்தில் சமர்ப்பித்து அவருக்கு எதிராக நடவடிக்கையை கோர முடியும்
குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்தில் வைத்தியர்கள் ஈடுபடுகின்றார்கள் உட்பட்ட மிக மோசமான குற்றசாட்டுகள் குறித்த ஆதாரங்களை முன்வைத்து தண்டனை பெற்று கொடுக்க முடியும்.
ஆனால் அதற்கும் அர்ச்சனா இராமநாதனோ அல்லது அவருக்கு கொடையளிக்கும் புலம் பெயர் அறிவாளிகளும் தயாரில்லை
அவரை இயக்கும் எல்லா தரப்புகளும் அவதூறுகள் ஊடக சமூக கொதி நிலை மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தவே விரும்புகின்றார்கள்
இதன் அடிப்படையிலேயே ஜேவிபி அரசாங்கமும் கூட உட்கட்டமைப்பு நெருக்கடி , வைத்தியர் பற்றாக்குறை, சுகாதார ஊழியர் பற்றாக்குறை என் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கும் ஒரு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி மீதான முகாந்திரம் அற்ற அவதூறுகளை பரப்ப அனுமதிக்கின்றது
இதனால் தான் தலைவன் தம்பி நான் ..நெஞ்சில் சு*டுங்கள் என்கின்ற வெட்டி வீர கதைகளை பேசி ஒரு புறம் வெளிநாட்டில் வசூலில் ஈடுபட்டு கொண்டு மறுபுறம் தன்னை பாதுகாக்க தன்னை இயக்கும் தரப்புகளின் தேவைகளுக்கு ஏற்ப குழப்பங்களை ஏற்படுத்தி தற்காத்து கொள்ள முயற்சிக்கின்றார்
கருத்துகள் இல்லை