சீன நாட்டு பெண்ணுக்கு உதவிய சிறப்பு அதிரடிப் படையினர்!📸
நேற்றைய தினம் நுவரெலியா சிறப்பு அதிரடிப் படையினர் முகாம் அதிகாரிகள் குழுவொன்று மெலிய பகுதிக்கு பயணம் செய்து கொண்டு இருந்த போது அங்கு இருந்த சீன நாட்டு பெண் ஒருவருக்கு இடது கால் முறிவு காரணமாக வீழ்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த வெளிநாட்டு பெண்ணுக்கு உதவும் வண்ணம் தங்களிடம் இருந்த முதலுதவி பொருட்களை பயன்படுத்தி முதலுதவி அளித்துள்ளனர்.
பின்னர் தங்களிடம் இருந்த ஏனைய பொருட்களை பயன்படுத்தி அவரை 4 கிலோமீட்டர் தூரம் சிரமமான பாதை ஊடாக பிரதான பாதைக்கு கொண்டுவருவதற்கு கடும் முயற்சி எடுத்துள்ளனர்.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.
மனித நேயம் உள்ள கடவுளின் உருவத்தில் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளுக்கு நன்றிகளை வெளிநாட்டு பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை